Friday, February 21, 2014

அறிவரசி சமுக நல கல்வி அறக்கட்டளை

அறிவரசி சமுக நல கல்வி அறக்கட்டளை

                                         சமுதாய முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் சிறந்து (இலவச பள்ளி பாடப் பயிற்சி) விளங்கிடவும் , அனைவரும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிடவும்(சுய தொழில் பற்றிய பயிற்சி), அரசு வேலைக்கான அரசுத் தேர்வுக்கான பயிற்ச்சியும் தொடங்கவிருக்கும் அறக்கட்டளையின் வாயிலாக அளிக்கவுள்ளன. 

                                    மேலும் பெண்களுக்கு கைத் தொழில் கூட்டுத் தொழில் பயிற்சியும் அளிக்கவுள்ளது. இதற்கு கூடிய விரைவில் இதற்க்கான விண்ணப்பம் வெளியிடப்படும். முதலில் நாகப்பட்டினம் மாட்டம், வேதரண்யம் வட்டத்திலுள்ள கிராமங்களிலிருந்து தொடங்க உள்ளன.

                                        நாகப்பட்டின மாவட்டத்தில் 8 வட்டமும் 519 ஊராச்சிகளும் உள்ளன ஒவ்வொரு ஊராச்சியின் கீழ் 3 ஊர்களும் இருக்கின்றன.
அதன் விவரங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

                   இந்த உலகம் மகிழ்ச்சியாக இருக்க, பசியின்றி இருக்க, தன் சொந்த முயற்ச்சியில் நலமுடன் வாழ உங்களுக்குத் தொரிந்த நேர்மையானத் தொழில் அல்லது வேலை வாய்ப்புகள், தொழில் பயிற்சி அளிக்க நல்ல ஆலோசணைகளைத் தரலாம்.

உங்களால் இயன்ற உதவியை நம் மக்களுக்கு செய்யுங்கள் !


                                                           நன்றி

                                   இந்நிலையும் மாறும் என்ற தன் நம்பிக்கையுடன்
                                                                        முனைவர் செ.வீர அழகிரி




Number of Taluks
8
Number of Revenue Villages
519
(Select any taluk)
Taluk
Revenue Villages









Number of Revenue Villages
57
Adhanur ( 48 )
Ahasthiyam Palli
Andahathurai ( 24 )
Ayakaran Pulam 1 St Sethi ( 39 )
Ayakaran Pulam 2 Nd Sethi
Ayakaran Pulam 3 Rd Sethi
Ayakaran Pulam 4 Th Sethi
Kadan Thethi ( 4 )
Kadina Vayal ( 47 )
Kallimedu ( 16 )
Karuppam Pulam ( 49 )
Kathiripulam ( 29 )
Kodia Kadu ( 54 )
Kodiayakarai ( 541 )
Kovil Paththu ( 10 )
Kuravap Palam ( 40 )
Maharaja Puram Kilpathi ( 23 )
Maharasapuram Melpathi ( 22 )
Marudhur South ( 38 )
Marudur North ( 31 )
Moolakarai ( 25 )
Nakudaiyan ( 28 )
Naluveda Pathi ( 12 )
Panchanadhi Kulam West ( 37 )
Panja Nadhikulam East (42)
Panja Nadhikulam Naduseth ( 43 )
Pannal ( 46 )
Peria Kuthahai ( 51 )
Pirinji Moolai ( 5 )
Prandhiyangarai
Putpavanam
Sembodai ( 15 )
Senbaharaya Nallur ( 30 )
Setti Pulam
Thakattur Pethachikadu
Thakattur Subramaniyakadu
Thalanayar 1 St Sethi ( 8 )
Thalanayar 2 Nd Sethi ( 9 )
Thalanayar 3 Rd Sethi ( 18 )
Thalanayar 4 Th Sethi ( 17 )
Thalanayar 5 Th Sethi ( 19 )
Thalanayar Agraharam ( 7 )
Thani Kottaham ( 33 )
Thennadar ( 36 )
Thethakudi North ( 14 )
Thethakudi South ( 50 )
Thiru Maalam
Thopputhurai ( 522 )
Thulasapuram ( 20 )
Umabala Cheri ( 21 )
Vadamazhai ( 26 )
Vaimedu East
Vaimedu West
Vanduvanjeri ( 34 )
Vedaranyam
Vedaranyapuram ( 52 )
Vella Pallam ( 11 )


புகைப்பிடித்து, மதுக்குடித்து மற்றவறையும் கொல்லாதீர்கள் !!!

 

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

 

புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். சிகரெட் புகையில் ஆயிரக்கணக்கான கரிப்பொருள்கள் உள்ளன. அவற்றில் நிக்கொட்டின், கரிமிலவாயு, பினால், பீனதெப்தலீன், இணடோ கார்பசோல், ஹைட்ரோ சயனிக் அமிலம், அசிடால்டிஹைடு போன்றவை புற்றுநோயின் காரணிகள் ஆகும். அதனால் வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.

புகையிலையினால் ஏற்படுகிற வாய்ப்புற்று நோய் கொண்ட நோயாளிகள், உலகிலேயே, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில்  உள்ளனர்.
இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு, முறையே 56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது.
90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.
ஸ்இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம்,
இந்தியாவில் 82% நாட்பட்ட நுரையீரல் சுவாசக்குழாய் அடைப்பு நோய் ஏற்பட புகைப்பிடித்தல் காரணமாய் அமைகிறது.
புகையிலை மறைமுகமாக நுரையீரல் டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறது. எப்போதும் புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் ஆகும். சிகரெட் அல்லது பீடிகளை அதிகளவு புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
புகைத்தல் / புகையிலை திடீரென இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது.
புகையிலை, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில் காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும் புண்களை ஏற்படுத்தலாம்.
புகையிலை, உடல் முழுவதிலும் உள்ள தமனி எனப்படும் இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக்குழாய் சுவர்களை சேதப்படுத்துகிறது.
புகைத்தல், சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு உடல்நலக்கேட்டினை ஏற்படுத்துகிறது. புகைப்பழக்கமில்லாத ஒருவர், புகைப்பழக்கம் (ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கும்) உள்ளவரோடு சேர்ந்து வாழும்போது, புகைபிடிக்காத நபர் அவரை அறியாமலேயே மூன்று சிகரெட்டினை புகைக்கிறார். இது அவரின் சிறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்டே கணிக்கப்பட்டது.
புகைத்தல்/புகையிலை பயன்பாடு டையாபிடிஸ் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிற காரணியாக அமைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
புகையிலை, இரத்தத்திலுள்ள நன்மை பயக்கக்கூடிய கொழுப்பின் அளவை குறைக்கிறது.
புகைபிடிப்பவர்கள் / புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு பயன்படுத்தாதவர்களை விட இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது.ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புற இரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.
ANd9GcSbGNIWhxQY_pABT1H1JGya_lweCEGHoqsiFS696sXi8nlfjJhS2gவெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை கலந்த உருண்டையை வாயில் அடக்கி வைத்துக் கொள்ளும் பழக்கமுள்ளவர்களுக்கு வாயில் புற்று நோய் உண்டாகிறது.
            வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.
நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற் சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.
கணைய புற்றுநோய் : புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுடைய ஆண்களுக்கு இந்நோய் அதிகம் வரும். வயிற்றுவலியானது வயிற்றின் நடுவில் வலிக்கும். முன்புறமாக குனிந்தால் குறைந்தது போல இருக்கும். காமாலை, உடல் எடை குறைவு, உணவுப் பாதையில் இரத்தக் கசிவு, அரிப்பு போன்றவை ஏற்படும்.

ஒவ்வொரு 8 விநாடிகளில் 1 புகையிலை சம்மந்தமான மரணம் நிகழ்கிறது.

இந்தியாவில் புகையிலை சம்மந்தமான உயிரிழப்பு ஆண்டிற்கு 8 முதல் 9 லட்சம் ஆகும்.
புகையிலையை தவிர்ப்பதால் ஒரு விடலைப்பருவத்தினரின் வாழ்வில் 20 ஆண்டுகள் கூடுகிறது. புகையிலை பயன்படுத்தும் விடலைப்பருவத்தினரில் பாதிப்பேர் புகையிலை உபயோகத்தால் கொல்லப்படுகின்றனர். (மீதமுள்ளவர்களில் பாதிபேர் நடுத்தரவயதிலும், பாதிபேர் முதிர்வயதிலும் கொல்லப்படுகின்றர்).
புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேகமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் புகைத்தல் / புகையிலை பயன்படுத்துவதாலோ அல்லது சுவாசித்தாலோ ஏற்படும் பாதிப்புகள்.

Ø   ஆண்களில் மலட்டுத் தன்மை ஏற்பட, புகைப்பழக்கம் ஒரு காரணமாக அமைகிறது.
Ø   புகைத்தல் / புகையிலை பயன்பாடு, பெண்களில் ஈஸட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் நின்றுபோவது குறித்த காலத்திற்கு முன்பே ஏற்படுகிறது.
Ø   புகைத்தல் / புகையிலை பயன்பாடு உடலின் செயல் மற்றும் திறனை குறைக்கிறது.
Ø   புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது, ஸ்ட்ரோக் (மூலை பாதிப்பு) ஏற்படும் வாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது.
Ø   கர்ப்பிணிகள் உள்ள இடத்தில் புகைக்காதீர்கள், குழந்தையை இழக்க அதிகவாய்ப்பு உள்ளது. குறைந்த எடையுடன் கூடிய பிள்ளைபிறக்கும் வாய்ப்புள்ளது. வளர்ச்சியில் கோளாறுகள் கொண்ட குழந்தையாகவும் பிறந்த குழந்தை திடீரென இறக்கவும் வாய்ப்புள்ளது.

புகையிலையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

1.    உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.
2.    உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.
3.    நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்படமாட்டார்.
4.    உங்கள் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் இருமல் மற்றும் சளி மறையலாம்.
5.    உங்கள் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும்.

புகையிலையை தவிர்ப்பதால் ஏற்படும் சமுதாய நன்மைகள்

1.    நீங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின், சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.
2.    உங்கள் சுயதோற்றம் மற்றும் சுயநம்பிக்கை வளரும்.
3.    இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராய் இருப்பீர்கள்.
4.    புகையிலையை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம், மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்.

காலம்
சிகரெட்டின் எண்ணிக்கை
விலை
மொத்தத் தொகை
ஒரு நாள்
5
6.00
30.00
ஒரு மாதம்
150
6.00
900.00
ஒரு வருடம்
1800
6.00
10,800.00
ஐந்து வருடம்
9000
6.00
54,000.00
பத்து வருடம்
18000
6.00
1,80,000.00

மதுபானம், இரசாயன மருந்துகள் மற்றும் போதைகள்:
Ø  நம் போன்ற வெப்ப நாடுகளில் (Tropical countries) இவற்றை எடுப்பதன் மூலம் நம் உடலை மேலும் இரணமாக்கவும், நரம்புகளைக் கெடுத்து நம்மை நடை பிணமாக்கவும் செய்கிறோம்.
Ø  அதிலும், நம்மவர்கள் அளவுக்கு அதிகமாக குடிப்பதையும், போதையிலேயே விழுந்து கிடப்பதையும் பொழுதுபோக்காக வைத்துக்கொள்கிறோம்.
Ø  குடிக்கும் நபரின் சிறுநீரானது தூய நீரைப்போல் வெளிப்படும். இதற்கு காரணம், நாம் குடிக்கும் அல்ககால் (Alcohol) நம் உயிர்ச் சக்தியை கனிசமாக காலி செய்வதால், சிறுநீரகத்திற்கு போதிய சக்தி கிடைப்பதில்லை.
Ø  இதனால், சிறுநீரகம் நம் உடலுக்கு வேண்டிய உயிர் சத்துக்களை பிடித்து வைத்துக்கொள்ள முடியாமல், அனைத்தையும் விட்டுவிடுவதால், வெளிவரும் சிறுநீர் வெண்மையாக இருக்கிறது.
Ø  அன்பு நண்பர்களே! வேண்டிய உயிர்ச் சத்துக்களை சிறுநீரகம் பிரித்து எடுத்துக் கொண்ட பின்னர் வெளிப்படும் கழிவு சிறுநீரானது வெளிர் மஞ்சள் அல்லது அதிலுள்ள கழிவின் தன்மைக்கு ஏற்ப  கருமை கூடும்.
Ø  வெளுப்பான சிறுநீரகம் சத்து இழப்பைக் குறிக்கிறது.
Ø  போதப் பொருட்கள் நம் நரம்பை பாழ் படுத்தி, உயிர் ஓட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஏழு (மூலாதாரம், சுவாதிஸ்டானம்,மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை மற்றும் துரியம்) உயிர்ச் சக்கர மையங்களின் ஒருங்கிணைப்பை கெடுத்துவிடுகிறது.
Ø  அப்புறம்  நம் உயிர் தறிகெட்டு ஓடத்தான் செய்யும். வேண்டுமா இந்த நிலை?

மது குடிப்பதால் ஏற்படும் கெட்ட குணங்களின் தன்மையை அறியலாம்:
Ø  நம் குணங்களின் தன்மைக்கு ஏற்ப நம் உடல் உறுப்புகளின் உயிர்ச் சக்தி நிலை மாற்றம் ஏற்படுகிறது. சான்றாக, அதிகப்படியான கோபம் நம் கல்லீரல் உயிர்ச் சக்தியைக் குறைக்கிறது.
Ø  அதிக கவலை நம் மண்ணீரலைக் கெடுக்கிறது.
Ø  அதிக பயம் நம் சிறுநீரக உயிர்ப்பை பாதிக்கிறது.
Ø  அதிக குழப்பம்  நம் மூளையின் சக்தியை விரையம் செய்கிறது.
Ø  அதிக பதட்டம் நம் இதய சக்தியைக் குலைக்கிறது.
Ø  அதிக மன வருத்தம் நம் நுரையீரல் சக்தியைக் குறைக்கிறது
Ø  அதிக வெறுப்பு நம் பிறப்புறுப்பு மண்டலத்தின் சக்தியைக் குறைக்கிறது.
Ø  அதிக மனச்சோர்வு நம் சதை மண்டலத்து சக்தியை வீனாக்குகிறது.
Ø  அதிக வஞ்சம் மற்றும் பழி  உணர்வு நம் நரம்பு மண்டலத்து சக்தியை காலி செய்கிறது.
Ø  அதிக சோம்பல் நம் இராத்த சக்தியைக் குறைக்கிறது.
Ø  அதேபோல், எதிர்மறையான எண்ணங்களும்  நம் உயிர்ச் சக்தியைக் குறைக்கும்.
Ø  எல்லாவற்றையும் விட அதிகப்படியான பாலுணர்ச்சியானது நம் உடல் முழுமைக்குமான உயிர்ச் சக்தியை அதி விரைவாக குறைத்துவிடும்.

வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம். ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.
ANd9GcR_FeB_7uDF0vzuHYRaFrv9xxj-0FNLaM_DMECl49_q8s20JsZWதயவு செய்து குடித்து விட்டு வண்டி ஓட்டாதீங்க … குடி பழக்கம் கொண்டவர்கள் குடிக்காத நண்பரை ஓட்டச் சொல்லி அமர்ந்து வண்டியில் போங்க.
மதுபானங்கள் அருந்துவதால் வயதுக்கேற்ப உடலில் விளைவுகள் உண்டாகும். பெரியவர்கள் மது அருந்துவதால், அவர்களது உடல் நலம் பாதிக்கப்படும். ஆனால், குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினர், மதுபானங்கள் அருந்துவதன் மூலம் அவர்களது சராசரி மூளை முதிர்ச்சி பாதிக்கும். டீன் ஏஜ் பிள்ளைகள் போதை மருந்து மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகக் காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் 4 முக்கிய விஷயங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

1.அவர்களது மனநிலையை மாற்றிக் கொள்ள.
தனது சக நண்பர்கள் செய்வதைத் தாமும் செய்ய நினைத்து, அதன் மூலம் அவர்களிட ம் அங்கீகாரத்தைப் பெற நினைப்பார்கள். ஒரு சிலருக்கு போதை மற்றும் மது எடுத்துக்கொள்வதால் மனநிலையிலும் நடத்தையிலும் ஏற்படுகிற மாற்றங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம். சக நண்பர்களின் கட்டாயத்தின் பேரிலோ அல்லது வேறு சமூகக் காரணங்களுக்காகவோ டீன் ஏஜில் இந்தப் பழக்கம் ஆரம்பிக்கும்.

2.சமூக அளவிலான பயங்களை எதிர்கொள்ள.
தனிப்பட்ட பிரச்னைகள் என்று பார்த்தால், மிகக்குறைந்த தன்னம்பிக்கை , மதிப்பெண்கள் குறைதல், படிப்பதிலும், பழகுவதிலும் திறமையின்மை போன்றவை. குடும்பத்தில் யாருக்கேனும் குடி மற்றும் போதைப் பழக்கம் இருப்பது, அப்பா, அம்மாவைப் பற்றிய தவறான இமேஜ், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பேச்சுப் பரிமாற்றக் குறைபாடு, வீட்டில் எப்போதும் தொடர்கிற சண்டைகள் போன்றவை குடும்ப அளவிலான காரணங்கள்.
எளிதில் மது மற்றும் போதை மருந்துகள் கிடைக்கும் சூழல் மற்றும் அதன் உபயோகம் அதிகமுள்ள சூழல் இரண்டும் சமூக அளவிலான காரணங்கள். எல்லாவற்றையும் விட, குடிப்பழக்கம் உள்ள பெற்றோரிடம் வளரும் பிள்ளைகளுக்கு அந்தப் பழக்கம் தொற்றிக் கொள்வதில் ஆச்சரியம் தேவையில்லை.

3.நச்சரிப்பு எண்ணங்களைக் குறைக்க.
4.சமூகப் புறக்கணிப்பைத் தவிர்க்க.

காலம்
மது பாட்டில் எண்ணிக்கை
விலை
மொத்தத் தொகை
ஒரு நாள்
1
100.00
100.00
ஒரு மாதம்
30
100.00
3000.00
ஒரு வருடம்
360
100.00
36000.00
ஐந்து வருடம்
1800
100.00
1,80,000.00
பத்து வருடம்
3600
100.00
3,60,000.00

பான் மசாலா
காலம்
பான் மசாலா
எண்ணிக்கை
விலை
மொத்தத் தொகை
ஒரு நாள்
3
3.00
9.00
ஒரு மாதம்
90
3.00
270.00
ஒரு வருடம்
1080
3.00
3240.00
ஐந்து வருடம்
5400
3.00
16,200.00
பத்து வருடம்
10800
3.00
32,400.00


வெற்றிலை பாக்கு புகையிலை

காலம்
வெற்றிலைபாக்கு எண்ணிக்கை
விலை
மொத்தத் தொகை
ஒரு நாள்

10.00
10.00
ஒரு மாதம்
30
10.00
300.00
ஒரு வருடம்
360
10.00
3600.00
ஐந்து வருடம்
1800
10.00
18,000.00
பத்து வருடம்
3600
10.00
36,000.00

ஒரு நபர் பத்து வருடங்களில் போதைப் பொருட்களுக்காக செய்யும் செலவு

காலம்
சிகரெட்டின்
மது
வெற்றிலை பாக்கு
பான் மசாலா
மொத்தம்
ஒரு நாள்
30.00
100.00
10.00
9.00
149.00
ஒரு மாதம்
900.00
3000.00
300.00
270.00
4470.00
ஒரு வருடம்
10,800.00
36000.00
3600.00
3240.00
53,640.00
ஐந்து வருடம்
54,000.00
1,80,000.00
18,000.00
16,200.00
2,68,200.00
பத்து வருடம்
1,80,000.00
3,60,000.00
36,000.00
32,400.00
6,08,400.00

நண்பர்களே! சிந்தியுங்கள் முதலில் உங்கள் உடலை பாதுக்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் போதைப் பொருளை பயன்படுத்துவதால் உங்களை மட்டும் அல்ல உங்களை சுற்றியுள்ள அனைவரையும் மேற்கண்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்ற விரக்தி இனி வேண்டாம். தினம் போதைப் பொருள்களுக்கு செய்யும் செலவை சேகரித்தல் போதும் நீங்கள் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. குறைந்தது இரண்டு வருடங்களில் இலட்சாதிபதியாகலாம்.
உங்கள் குழந்தைகள் போதைப் பொருளைப் பயன்படுத்துவற்கும் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் நீங்களே காரணம்.
நீங்கள் போதைப் பொருளை பயன்படுத்த போலியானக் காரணங்களை கூறாதீர்கள்.
நீங்கள் போதைப் பொருட்களை விட்டொழித்தால் உங்களை மட்டும் அல்ல உங்கள் சந்ததிகளையும் நலமுடன் வாழ வழி செய்யலாம்.
போதைப் பொருட்கள் சாப்பிட்டு நடை பிணமாக அலைவதை நிறுத்துங்கள். மற்றவர்கள் வணங்கும் நல்ல மனிதனாக வாழுங்கள்

இந்நிலையும் மாறும் என்ற தன் நம்பிக்கையுடன்
உங்கள் தோழன்
முனைவர் செ.வீரஅழகிரி நிர்வாகி, சேர்மன், 
அறிவரசி சமுகநல கல்வி அறக்கட்டளை
ஆதனூர் (அஞ்சல்)
வேதாரண்யம் (தலுக்கா)
தொடர்பு எண் : 08973431246
மின்னஞ்சல் முகவரி : aswedtrust@gmail.com